Monday, 9 November 2015

குருவியின் சிறு கதை


நான் மகிழ்ச்சியாக மரத்துக்கு மரம் பறந்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். இதை போன்று இனிமையாக வேறு எதாவது உள்ளதா? “சிட்டு, இங்கே வா” எனத் தாய் குருவி கூவியது. “உணவுண்ண நேரம் ஆகிவிட்டது.”  “சரி மா. நண்பர்களே, நான் உணவு உண்டுவிட்டு வருகிறேன் ” என்று கூறிவிட்டு என் மரத்திற்கு நான் சென்றேன். அங்கு என் தம்பிகளும் தங்கைகளும் மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருப்பதை கண்டேன். அக் காட்சி மிக இன்பமாக இருந்தது. அம்மா எங்களுக்கு உணவு தந்துவிட்டு வெளியே விறகு  தேடி சென்றார்.




உணவு உண்டுகொண்டிருக்கும்போது வெளியே புகை தென்பட்டது. வெளியே சென்று பார்த்தபொழுது சுற்றியுள்ள மரங்கள் எரிந்து கொண்டிருப்பதை கண்டு நான் அதிர்சியடைந்தேன். மற்ற பறவைகள் பயத்துடன் பறப்பதை கண்டேன். என் மரம் எரிவதைக் கண்டு உள்ளே என் உடன் பிறப்புகளை காக்க முயன்றேன். ஆனால் நெருப்பு மிக வேகமாக பரவியதால் நான் உடனடியாக மரத்தைவிட்டு பறந்து சென்றேன். நான் கீழே பார்தபோது நெருப்பு, காடு முழுவதும் பரவியிருந்தது.

நான் வெகு தூரம் பறந்து சென்றேன். இறுதியில் , கட்டடம் ஒன்றன்மீது அமர்ந்தேன். என்னை சுற்றி பார்தேன். உயர்ந்த கட்டடங்கள், கம்பிகள், வாகனங்களை நான் கண்டேன். என் காட்டைப் போன்று  இல்லாமல் இங்கு எங்கே பார்த்தாலும் புகைமூட்டமாக உள்ளது. இங்கு எவ்வாறு  உணவு தேடுவேன் தெரியவில்லை. மனிதர்கள் வாழும் இடத்தைக் கண்டால் எனக்கு அச்சமாக உள்ளது. நான் அருகில் இருந்த ஒரு வீட்டினுள்  ஜன்னல் வழியாக புகுந்தேன். அங்கே உணவு உள்ளதா என தேடிக்கொண்டிருக்கும்போது, மூதாட்டி ஒருவர் கையில் கம்பை பிடித்துக்கொண்டு வீட்டை விட்டூ துரத்தினார். 


அவ்வீட்டை விட்டு நான் உடனடியாகப் பரந்து சென்றேன். என் கண்ணில் கண்ணீர் தோன்றியது, என் காட்டிற்கு செல்ல வேண்டுமென இருந்தது. இம்மனிதர்களின் பேராசையினால் என் உடன்பிறப்புகள் இறந்ததை நினைத்து நான் வருந்தினேன். இது எல்லாம் அவசியம் தானா என்று நான் யோசித்தேன். மரங்களை அழிப்பதால்  இனங்கள் பல அழிகின்றன. தனக்கு வீடுகளை கட்ட வேண்டுமானால் எங்கள் வீடுகளும் உயிர்களும் பலியாகவேண்டுமா? ஆனால் அவர்கள் அறியாதது ஒன்று உள்ளது. மரங்களை அழிப்பது தண்ணியே அழிப்பதற்கு சமமாகும். இதை அவர்கள் அறிந்திருந்தால் பல உயிரினங்கள் காக்கப்பட்டிருக்கும். மரங்களை காப்போம் மரங்கள் நம்மை காக்கும்.

ஈ ல அபிஷேக் , சி.அபிஷேக்