Tuesday, 5 January 2016

ஒரு மரத்தின் சுயசரிதை


நண்பர்களே, நான் தான் நீங்கள் தினமும் வழிப்படும் வேப்பமரம். நான் இங்கு என் சுயசரிதையை மிகச் சுருக்கமாக, என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டு உங்கள் முன் நிழலிடுகிறேன்.

நின்றால் நிழல், படுத்தால் விறகு, எரித்தால் சாம்பல் உரமாக நான் இந்நாள் வரை இருந்தேன். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என பலவற்றிற்கு என்னால் இயன்ற உதவிகளை செய்துகொண்டு வருகிறேன். ஆயினும், என்னைப் போல் பலரின் தலையெழுத்தை சிலர் மாற்றிவிட்டனர்.
நான் 1876 ஆம் ஆண்டு, தை மாதம் 8 ஆம் நாள், பூவரசநல்லூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தேன். கமலா என்ற ஒரு சிறுமி என்னை கண்ணும் கருத்துமாய் வளர்த்தாள்.

தினமும் எனக்கு தேவையான தண்ணீரை ஊற்றி, என்னையும் அவளைப்போல் ஒரு சிறுமியாக கருதி, என்னுடன் விளையாடினாள். நானும் அவளுக்கு எப்பொழுது ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், என் காய்கள், கனிகள், கொட்டைகள், பூக்கள் முதலியவற்றை மருந்தாக அளித்தேன். இதனால் நாங்கள் இருவரும் மிக நெருக்கமான சிநேகிதர்கள் போல் பழகிவந்தோம்.

அவளுக்கு மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நான் உதவியாக இருந்தேன். ஆனால், ஒரு நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு நாள் கமலாவும் அவளது தோழிகளும் உல்லாசமாக என்னை சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். பச்சை பசேலென்று அங்கு இருந்த புள்ளிலிருந்து சலசலவென ஒரு சத்தம் கேட்டது. மிக வேகமாக சில பேர் நடந்து வருவதை உணர்ந்தேன். சற்று திரும்பி பார்த்தவுடன் எனக்கு பகீரென்றது. கோடாரியுடன் இருவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
“ஒன்றைக் கூட விடாதீர்கள், அனைத்தையும் வெட்ட வேண்டும்” என்று ஒரு குரல் ஒலித்தது. விரைவாக வந்த இருவர், கோடாரியால் என் தாயை நோக்கி சென்றார்கள். என் கண் முன்னால் என் தாய் இறப்பதை காண தைரியம் இல்லாத நான் அவர்களிடம் கெஞ்சினேன், கதறினேன்.
“மனிதர்களே மருந்தாக நிழலாக உரமாக இருந்த எங்களை வெட்டுவதற்கு உங்களுக்கு ஈவு இரக்கம் இலலையா. பலரை வாழ வைத்த எங்கள் வாழ்க்ககை்கு உலை வகைகிறீர்களே, இது நியாயமா?” என்றனே். பலமாக சிரித்த ஒருவன், “இதை எங்களிடம் கேட்காதே அதோ பார் பளிங்கு மாளிகை தெரிகிறதே. அதற்கு சொந்தக்காரரான பண்ணயைார் இந்த நிலத்தில் பெரிய தொழிற்சாலை கட்டப்போகிறார்” என்றான்.

“அது சரி அதற்கு முன் நான் சொல்வதைக் கேளுங்கள். எங்களை வளர்ப்பதால் மழை கிடைக்கிறது, மண் அரிப்பு தடுக்கப்படுகிறது, காடுகள் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அழிப்பதாலோ வெப்பமயமாகுதல், காற்று மாசுபடுதல் மற்றும் அமில மழை உண்டாகின்றன” என்று கூறினேன். கவனமாக கேட்ட அவர்கள், “மரமே நீ சொல்வதில் உண்மை இருக்கிறது. நாங்கள் இப்போதே பண்ணையாரிடம் மரத்தை வெட்டுவதை நிறுத்த சொல்கிறோம் என்றனர். அவர்கள் அகக்கண்கள் திறக்கப்பட்டதைக் கண்டு அகமகிழ்ந்தேன்.
எனக்கு நடந்த இச்சம்பவத்திலிருந்து நான் தப்பினேன். ஆனால், எனக்குப் பின் வந்த பல மரங்களுக்கு எங்களைப் போல் அவர்களிடத்தில் பேசி புரியவைப்பதற்கு வாய்ப்பு கிட்டவில்லை. இன்றோ நான் வாழ்ந்த இடம் ஒரு வெறுத்த பாலைவனமாக இருக்கிறது.

அதனால் தான் கூறுகிறேன் நண்பர்களே, எங்களை வாழவிடுங்கள், நாங்கள் உங்கள் வாழ்க்கையை செம்மையாக்குகிறோம்.

லிபி







காடுகள்


கல் தோன்றா மண் தோன்ற காலத்தில் இருந்து நான் இந்த உலகில் வசித்து வருகிறேன். மனித வாழ்கைக்கு முன்பில் இருந்து நான் இவ்வுலகில் நான் இருக்கிறேன்.நான் வாழ்வின் ஆதாரம் மற்றும் மழை ஆதாரம் கூட. 

ஆனால், இன்றோ என்னை பலர் அழிக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் உலகை நாகரிக்கும் காரணத்தினால் என்னை அழித்து நிறைய தோட்டங்கள் அமைத்து வியாபார ரீதியாக பயிர்கள் வளர்த்தார்கள் மற்றும் பல நகரங்கள் அமைத்தார்கள்.வீடு கட்டுவதற்காக பலர் என்னை அழித்து நிலத்தில் வீடு கட்டுகிறார்கள். மேலும் மரங்களில் இருந்து பல பயனுள்ள பொருள்கள் பெறுகிறார்கள்.மரங்களில் இருந்து எண்ணெய்கள் தாள்கள் பெறுகிறோம்.

இதனால் என்னை போன்றவர்கள் மிக வேகமாக அழிந்து வருகிறோம்.எங்களை போன்றவர்களை அழிப்பதினால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம். என்னை அழிப்பதனால் தான் உலகம் வேபமயம் ஆகும்.மேலும் இதனால் தான்   மழை குறைந்து வருகிறது. மேலும் இதனால் தான் நமது சுற்றுசுழல் மாசு அடைகிறது.  என்னை அழிபதினால் தான் என்னை போன்ற காடுகள வாழவேண்டிய மிருகங்கள் தற்போது நகரங்களை தேடி வருகிறது.  அது மற்றும் இல்லை மிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆதலால் இந்த உலகை காப்பாற்ற நாம் நிறைய மரங்கள் வளர்த்து என்னை போன்ற நிறைய காடுகள் அமைத்து வளம் பெறுவோம்!!!

அபிநவ் 
தேனப்பன்  








வங்கப்புலியின் சுயசரிதையில


 நான் கருப்பு கோடுகளுடன் பழுப்பு நிறத்தில் இருக்கிறேன். நான் வங்காளம், நேபால், பூடான், சீனா, மியான்மர் போன்ற இடங்களில் காணப்படுவேன்.
              
எங்களின் இயற்கையான வாழிடங்களை அழிப்பதும் வேட்டையாடுதலும் எங்களுக்கு முக்கிய அச்சுறுத்தல்களாகும். எங்களின் உடலில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளில் பல மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, எங்களின் தோல் தவிர எங்களின் உடல்பாகங்களுக்காகவும் எங்களை வேட்டையாடுகிறார்கள். மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் எங்களை ஊர் மக்கள் சிலநேரம் கொல்கிறார்கள்.

 ஒரு  நாள், என் சொந்த உற்றார் உறவினர்கள் வேட்டைக்காரர்களால் என் கண் முன்னர் கொல்லப்படுவதை பார்த்தப்போது, எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சினத்தில் என் முகம் தக்காளிப்பழம் போல் சிவந்தது. நான் சற்றும் தாமதிக்காமல், வேட்டைக்காரர்களை கண்மூடித்தனமாக தாக்க முயன்றேன். அவர்களில் ஒருவன் என் காலை குறிப்பார்த்து சுட்டான்.   அனலில் விழுந்த புழுவைப் போல் வலியால் துடிதுடித்தேன். கண்களில் கண்ணீர் மல்க, நான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தேன்.
                
என் பெற்றோரின் இழப்பிற்குப் பிறகு, நான் தனி மரம் ஆகிவிட்டேன். என் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. மனிதர்கள் சுயநலமாக நடந்துக்கொள்வதால், என் இனத்தின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. இவர்களின் அநியாயத்தை தடுக்க யாரும் இல்லையா?
நான் என் குடும்பத்தோடு உவகையுடன் எனது வசிப்பிடமான கானகத்தில் வாழ்ந்து வந்தேன். மானிடர்கள் ஈவு இரக்கமின்றி வனங்களிலுள்ள மரங்களை வெட்டுவதால், எனக்கு தங்கக் கூட இப்போது இடமில்லை. விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்களை சார்ந்த பலரும் எங்களைப் பாதுகாக்க முயன்றாலும், சட்டவிரோதமான வேட்டைக்காரர்கள் எங்களை கண்மூடித்தனமாக தொடர்ந்து வேட்டையாடுகிறார்கள். இவ்வாறு நடந்தால், எங்களது நிலை வருங்காலத்தில் என்ன ஆவது?
                            
எனவே, நாங்கள் முற்றிலும் அழிவதற்கு முன்னர், எங்களை காப்பாற்ற வேண்டியது மனிதர்களின் கடமையாகும். எவ்வாறு மனிதர்கள் எங்களை பாதுகாக்க முடியும் என்றால், இணையத்தளங்களில் அவர்களின் ஆதரவை எங்களுக்கு காட்டலாம், பிறகு மற்றவர்களிடம் எங்களின் முக்கியத்துவத்தை கூறி, எங்களை பாதுகாக்க கூறலாம், என்னைப் போன்ற விலங்குகளால் செய்யப்பட்ட பொருள்களை வாங்காமல் தவிர்க்க வேண்டும் மற்றும் நாங்கள் வாழும் இடங்களில் வேட்டையாடுவதை தடை செய்யவேண்டும். மேலும், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும். எங்களின் எலும்புகளையும் தோலையும் பயன்படுத்திச் செய்யப்பட்ட அழகுச் சார்ந்த பொருள்களை வாங்கக்கூடாது.
எனவே, நாங்கள் மனிதர்களிடம் வேண்டுவது ஒன்ரே ஒன்றுதான், எங்களை வாழவிடுங்கள், எங்களை சரித்திரம் ஆக்கி விடாதீர்கள்!

-          உ.ஐஸ்வர்யா
-          ஷ்ருதி
 
                                              

சிறுகதை- விலங்குகளை பாதுகாப்போம்

ராமுவும் அவன் குடும்பமும் விடுமுறை நாட்களில் ஈரநிலம் 
இருப்புக்கு சென்றார்கள். பள்ளி ஆசிரியை ஈரநிலம் இருப்புக்கு 
விடுமுறை நாட்களில் செல்ல வேண்டுமென 
கட்டாயப்படுதியதால் குடும்பத்துடன் சென்றனர். அங்கு 
சென்றதும், ராமுவின் தங்கை, ரேவதி, விலங்குகளை கண்டு
அச்சம் அடைந்து, இங்கும் அங்கும் ஓடினாள். ரேவதி ஓடுவதை
கண்டு ராமுவின் தந்தை நிதானப் படுத்த அவள் பின்னால் 
ஓடினார். அப்போது ராமுவும் அவன் தாயாரும் நூழைவுச்சீட்டை வாங்கச் 
சென்றனர். ரேவதியை நிதானப்படுத்தி அவள் தந்தை 
நுழைவாயிலை நோக்கிச் சென்றார்.  அங்கு சென்றதும் ராமுவும் 
அவன் குடும்பமும் ஈரநிலம் இருப்பக்குள் நுழைந்தனர். 
                     
                     


பின் ரேவதி மின்கொத்திகளை பார்க்க வேண்டும் என்ற 
ஆர்வத்துடன் தன் தந்தையுடன் தேட சென்றாள். ராமுவும் அவன் அம்மாவும் நடந்து செல்லும் போது விலங்குகள் பலவற்றைக் காண இயலவில்லை. 
ராமுவின் ஆசிரியர் கொடுத்த திட்டப்பணியின்படி அவன் அவ்விலங்குகள் எவ்வாறு வாழ்கின்றன என்பதை பற்றி அறிய வேண்டும். ஆனால் 
மீன்களை தவிற வேறு எந்த விலங்குகளையும் காண 
இயலாமையால் அவன் வருத்தத்துடன் இருந்தான்தாயார்,விலங்குகள் விடுமுறை காலத்தில் வெப்பநிலை அதிகரித்ததால் ஓய்வு 
எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று எண்ணி கூறினார்.

   

பின்,ரேவதியும் அவள் தந்தையும் திடீரென்று ஓடி வந்து இருப்பின் இறுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் நம்ப 
முடியாத காட்சியைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொழிற் 
சாலைகள் பல,இருப்பை சுற்றி இருப்பதைக் கண்டனர். மற்றும் 
அத்தொழிற் சாலைகளிலிருந்து வரும் நச்சு புகையை கண்டனர். இருப்புக்கு அருகில் நதி ஒன்றில் பல நச்சு கழிவுகள் 
இருப்பதையும் கண்டனர். தொழிற் சாலைகளிலிருந்து வரும் 
கழிவுகளும் இந்நதியிலேயே கலந்திருப்பதை ராமு கண்டான்.




 பின் பல காண முடியாத விலங்குகள் நச்சுத்தன்மையுடைய 
நதியிலிருந்து குடிப்பதை கண்டு ராமு ஏன் விலங்குகள் இங்கே இருக்கின்றனஎன்பதை தந்தையிடம் கேட்டான். பின் அவர்கள் பல மீன்கள் உயிர் இழந்து போனதை கண்டனர். பின் ராமுவின் வினாவிற்கு தந்தை தொழிற் 
சாலைகளிலிருந்து வரும் நச்சு பொருட்களால் காற்று மற்றும் நிலம் 
மாசடைந்தது.ருப்பினை சரியாக பராமரிக்க தவறியதால் விலங்குகள் 
இங்கு வந்தனர். ராமு பின் இருப்பின் மேலாளரிடம் புகார் செய்ய 
தந்தையிடம் கூறினார். தந்தையும் அதன் படியே செய்தார்.


கதையை தயாரித்தவர்:
பிரியதர்ஷிணி
அக்க்ஷிதா