Tuesday, 5 January 2016

வங்கப்புலியின் சுயசரிதையில


 நான் கருப்பு கோடுகளுடன் பழுப்பு நிறத்தில் இருக்கிறேன். நான் வங்காளம், நேபால், பூடான், சீனா, மியான்மர் போன்ற இடங்களில் காணப்படுவேன்.
              
எங்களின் இயற்கையான வாழிடங்களை அழிப்பதும் வேட்டையாடுதலும் எங்களுக்கு முக்கிய அச்சுறுத்தல்களாகும். எங்களின் உடலில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளில் பல மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, எங்களின் தோல் தவிர எங்களின் உடல்பாகங்களுக்காகவும் எங்களை வேட்டையாடுகிறார்கள். மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் எங்களை ஊர் மக்கள் சிலநேரம் கொல்கிறார்கள்.

 ஒரு  நாள், என் சொந்த உற்றார் உறவினர்கள் வேட்டைக்காரர்களால் என் கண் முன்னர் கொல்லப்படுவதை பார்த்தப்போது, எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சினத்தில் என் முகம் தக்காளிப்பழம் போல் சிவந்தது. நான் சற்றும் தாமதிக்காமல், வேட்டைக்காரர்களை கண்மூடித்தனமாக தாக்க முயன்றேன். அவர்களில் ஒருவன் என் காலை குறிப்பார்த்து சுட்டான்.   அனலில் விழுந்த புழுவைப் போல் வலியால் துடிதுடித்தேன். கண்களில் கண்ணீர் மல்க, நான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தேன்.
                
என் பெற்றோரின் இழப்பிற்குப் பிறகு, நான் தனி மரம் ஆகிவிட்டேன். என் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. மனிதர்கள் சுயநலமாக நடந்துக்கொள்வதால், என் இனத்தின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. இவர்களின் அநியாயத்தை தடுக்க யாரும் இல்லையா?
நான் என் குடும்பத்தோடு உவகையுடன் எனது வசிப்பிடமான கானகத்தில் வாழ்ந்து வந்தேன். மானிடர்கள் ஈவு இரக்கமின்றி வனங்களிலுள்ள மரங்களை வெட்டுவதால், எனக்கு தங்கக் கூட இப்போது இடமில்லை. விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்களை சார்ந்த பலரும் எங்களைப் பாதுகாக்க முயன்றாலும், சட்டவிரோதமான வேட்டைக்காரர்கள் எங்களை கண்மூடித்தனமாக தொடர்ந்து வேட்டையாடுகிறார்கள். இவ்வாறு நடந்தால், எங்களது நிலை வருங்காலத்தில் என்ன ஆவது?
                            
எனவே, நாங்கள் முற்றிலும் அழிவதற்கு முன்னர், எங்களை காப்பாற்ற வேண்டியது மனிதர்களின் கடமையாகும். எவ்வாறு மனிதர்கள் எங்களை பாதுகாக்க முடியும் என்றால், இணையத்தளங்களில் அவர்களின் ஆதரவை எங்களுக்கு காட்டலாம், பிறகு மற்றவர்களிடம் எங்களின் முக்கியத்துவத்தை கூறி, எங்களை பாதுகாக்க கூறலாம், என்னைப் போன்ற விலங்குகளால் செய்யப்பட்ட பொருள்களை வாங்காமல் தவிர்க்க வேண்டும் மற்றும் நாங்கள் வாழும் இடங்களில் வேட்டையாடுவதை தடை செய்யவேண்டும். மேலும், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும். எங்களின் எலும்புகளையும் தோலையும் பயன்படுத்திச் செய்யப்பட்ட அழகுச் சார்ந்த பொருள்களை வாங்கக்கூடாது.
எனவே, நாங்கள் மனிதர்களிடம் வேண்டுவது ஒன்ரே ஒன்றுதான், எங்களை வாழவிடுங்கள், எங்களை சரித்திரம் ஆக்கி விடாதீர்கள்!

-          உ.ஐஸ்வர்யா
-          ஷ்ருதி
 
                                              

No comments:

Post a Comment